Home
183

மகிமையின் நம்பிக்கையே

          மகிமையின் நம்பிக்கையே
மாறிடாத என் இயேசைய்யா
உம்மையல்லோ பற்றிக்கொண்டேன்
உலகத்தில் வெற்றிகொண்டேன் (4)

துதித்து துதித்து மகிழ்ந்து புகழ்ந்து
தூயவர் உம்மை நான் பாடுவேன் (2)

ஆத்துமாவின் நங்கூரமே
அழிவில்லா பெட்டகமே (2)
நேற்றும் இன்றும் ஜீவிக்கின்ற
நிம்மதியின் கன்மலையே (2)

(துதித்து துதித்து...)

பள்ளத்தாக்கில் நடந்தாலும்
பயமில்லை பாதிப்பில்லை (2)
உம் குரலோ கேட்குதைய்யா
உள்ளமெல்லாம் அன்பால் பொங்குதைய்யா (2)

(துதித்து துதித்து...)

நல் மேய்ப்பரே நம்பிக்கையே
நானும் உந்தன் ஆட்டுக்குட்டி (2)
உம்மைத்தானே பின் தொடர்ந்தேன்
உம் தோளில் தான் நானிருப்பேன் (2)

(துதித்து துதித்து...)
        

Listen to the Song

Song 183
0:00 / 0:00
Speed:

Share this Song