184
என்னை ஆட்கொண்ட
என்னை ஆட்கொண்ட இயேசு
உம்மை யாரென்று நானறிவேன் (2)
உண்மை உள்ளவரே - என்றும்
நன்மைகள் செய்பவரே - என்றும்
நன்மைகள் செய்பவரே
(என்னை ஆட்கொண்ட...)
மனிதர் தூற்றும்போது - உம்மில்
மகிழச் செய்தவரே (2)
அதைத் தாங்கிட பெலன் கொடுத்து
தயவாய் அணைப்பவரே (2)
(என்னை ஆட்கொண்ட...)
தனிமை வாட்டும்போது - நல்
துணையாய் இருப்பவரே (2)
உம் ஆவியினால் தேற்றி
அபிசேகம் செய்பவரே (2)
(என்னை ஆட்கொண்ட...)
வாழ்க்கைப் பயணத்திலே
மேகத்தூணாய் வருபவரே (2)
உம் வார்த்தையின் திருவுணவால்
வளமாய்க் காப்பவரே (2)
(என்னை ஆட்கொண்ட...)