Home
185

எங்கு போகிறீர் இயேசு

          எங்கு போகிறீர் இயேசு தெய்வமே
எனக்காய் சிலுவையை சுமக்கும் தெய்வமே (2)

பாரச் சிலுவையோ என் பாவ சிலுவையோ
நீர் சுமந்தது என் பாவ சிலுவையோ
உம் உள்ளம் உடைந்ததோ
என் பாவச் சேற்றினால் (2)

(எங்கு போகிறீர்...)

தீய சிந்தனை நான் நினைத்ததால்
உம் சிரசில் முள்முடி நான் சூட்டினேன்
உம் உள்ளம் உடைந்ததோ
என் பாவச் சேற்றினால் (2)

(எங்கு போகிறீர்...)

பொறாமை கோபத்தால் உம் கன்னம் அறைந்தேனே
என் பெருமை எரிச்சலால் உம் விலாவில் குத்தினேனே
உம் உள்ளம் உடைந்ததோ
என் பாவச் சேற்றினால் (2)

(எங்கு போகிறீர் ...)

அசுத்தப் பேச்சுக்கள் நான் பேசி மகிழ்ந்ததால்
கசப்புக் காடியை நான் குடிக்கக் கொடுத்தேனே
உம் உள்ளம் உடைந்ததோ
என் பாவச் சேற்றினால் (2)

(எங்கு போகிறீர்...)
        

Listen to the Song

Song 185
0:00 / 0:00
Speed:

Share this Song