Home
186

மரித்த இயேசு உயிர்

          மரித்த இயேசு உயிர்த்துவிட்டார் அல்லேலூயா
மன்னன் இயேசு ஜீவிக்கிறார் அல்லேலூயா (2)

அல்லேலூயா ஜீவிக்கிறார்
அல்லேலூயா அல்லேலூயா ஜீவிக்கிறார் (2)

மரணம் அவரைத் தடுத்து நிறுத்த முடியவில்லையே
கல்லறையோ கட்டிக் காக்க முடியவில்லையே (2)
யூத சிங்கம் கிறிஸ்து ராஜா வெற்றி பெற்றாரே (1)
சோர்ந்து போன மகனே நீ துள்ளிப் பாடிடு

(அல்லேலூயா...)

கண்ணீரோடு மரியாள் போல அவரைத் தேடுவோம்
கர்த்தர் இயேசு நமக்கு இன்று காட்சி தருவார் (2)
கனிவோடு பெயர் சொல்லி அழைத்திடுவார் (1)
கலக்க மின்றி காலமெல்லாம் சாட்சி பகர்வோம்

(அல்லேலூயா...)

எம்மாவு சீடரோடு நடந்து சென்றார்
இறைவார்த்தை போதித்து ஆறுதல் தந்தார் (2)
அப்பம் பிட்டு கண்களையே திறந்து வைத்தார் (1)
அந்த இயேசு நம்மோடு நடக்கின்றார்

(அல்லேலூயா...)
        

Listen to the Song

Song 186
0:00 / 0:00
Speed:

Share this Song