Home
187

ஓ... மனிதனே நீ எங்கே

          ஓ மனிதனே நீ எங்கே போகிறாய் (1)
காலையில் மலர்ந்து மாலையில் மறையும்
மலராய் வாழ்கிறாய் (1)

(ஓ மனிதனே...)

மண்ணில் பிறந்த மானிடனே
மண்ணுக்கே திரும்புவாய் (2)
மரணம் உன்னை நெருங்கும்போது
எங்கே ஓடுவாய் (2)
மரணத்தின் பின்னே நடப்பது என்ன
என்பதை அறிவாயா (2)

(ஓ மனிதனே...)

பாவியாய்ப் பிறந்த மானிடனே
பாவியாய் மரிக்கிறாய் (2)
இயேசுவை உள்ளத்தில் பெற்றால் இன்றே
மரணத்தை வென்றிடுவாய் (2)
நித்திய ஜீவனைப் பெற்று மோட்சத்தில்
என்றும் வாழ்ந்திடுவாய் (2)

(ஒ மனிதனே...)
        

Listen to the Song

Song 187
0:00 / 0:00
Speed:

Share this Song