191
விண்ணப்பத்தைக் கேட்பவரே
விண்ணப்பத்தைக் கேட்பவரே - என் கண்ணீரைக் காண்பவரே சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசைய்யா - என் (விண்ணப்பத்தைக் கேட்பவரே...) உம்மால் கூடும் எல்லாம் கூடும் ஒரு வார்த்தை சொன்னால் போதும் (2) ஐயா ஒரு வார்த்தை சொன்னால் போதும் (விண்ணப்பத்தைக் கேட்பவரே...) மனதுருகி கரம் நீட்டி அதிசயம் செய்பவரே (2) ஐயா அதிசயம் செய்பவரே (விண்ணப்பத்தைக் கேட்பவரே...) சித்தம் உண்டு சுத்தமாகு என்று சொல்லி சுகமாக்கினீர் (2) ஐயா என்று சொல்லி சுகமாக்கினீர் (விண்ணப்பத்தைக் கேட்பவரே...) என் நோய்களை சிலுவையிலே சுமந்து தீர்த்தீரைய்யா (2) ஐயா சுமந்து தீர்த்தீரைய்யா (விண்ணப்பத்தைக் கேட்பவரே...)