Home
192

எனது தலைவன் இயேசு

          எனது தலைவன் இயேசு ராஜன்
மார்பில் சாய்ந்து சாய்ந்து
மகிழ்ந்து மகிழ்ந்திருப்பேன்

(எனது தலைவன்...)

இதய தீபம் எனது தெய்வம்
இரக்கத்தின் சிகரம் (2)
பார்த்து பார்த்து ரசித்து ருசித்து (1)
பரவசம் அடைவேன் (1)

(எனது தலைவன்...)

நீதி தேவன் வெற்றி வேந்தன்
அமைதியின் மன்னன் (2)
நினைத்து நினைத்து துதித்து துதித்து (1)
நிம்மதி அடைவேன் (1)

(எனது தலைவன்...)

நல்ல மேய்ப்பன் குரலைக் கேட்பேன்
நாளும் பின் தொடர்வேன் (2)
தோளில் அமர்ந்து கவலை மறந்து (1)
தொடர்ந்து பயணம் செய்வேன் (1)

(எனது தலைவன்...)

பசும் புல் மேய்ச்சல் அமர்ந்த தண்ணீர்
அழைத்துச் செல்பவரே (2)
ஆத்துமாவை தினமும் தேற்றி (1)
அணைத்துக் கொள்பவரே (1)

(எனது தலைவன்...)
        

Listen to the Song

Song 192
0:00 / 0:00
Speed:

Share this Song