194
தேவனே என் தேவா
தேவனே என் தேவா உம்மை நோக்கினேன் தண்ணீரில்லா நிலம்போல உமக்காய் ஏங்கினேன் (தேவனே என் தேவா...) ஒவ்வொரு நாளும் உம் பிரசன்னம் ஓடி வருகிறேன் (2) உம் வல்லமை மகிமை கண்டு உலகை மறக்கிறேன் (2) (தேவனே என் தேவா...) வாழ் நாளெல்லாம் உம் நாமம் வாழ்த்திப் பாடுவேன் (2) சுவையான உணவை உண்பதுபோல் திருப்தி அடைகிறேன் (2) (தேவனே என் தேவா...) எனது ஆன்மா தொடர்ந்து உம்மை பற்றிக் கொண்டது (2) உம் வலக்கரமோ என்னை நாளும் தாங்கிக் கொண்டது (2) (தேவனே என் தேவா...) ஜீவனைப் பார்க்கிலும் உம் கிருபை எனக்குப் போதுமே (2) உதடுகளாலே துதிக்கின்றேன் உலகை மறக்கின்றேன் (2) (தேவனே என் தேவா...)