196
எல்லாம் நீர் இயேசுவே
எல்லாம் நீர் இயேசுவே என்னுயிரும் நீர் இயேசுவே என் வாழ்வும் நீர் இயேசுவே பொல்லாத உலகில் பொருளேதும் வேண்டாம் பரம் பொருள் நீர் இயேசுவே (எல்லாம் நீர் இயேசுவே...) பாவியாய் நான் அலைந்தேன் பாதை தடுமாறினேன் (2) பாவ உலகில் பாவியை மீட்க பரிகாரம் நீர் இயேசுவே (எல்லாம் நீர் இயேசுவே...) திக்கற்று நான் அலைந்தேன் தீமையை நான் மறந்தேன் (2) தாவீதின் வேரும் தேவமைந்தனும் தயவும் நீர் இயேசுவே (எல்லாம் நீர் இயேசுவே...) மதியினை நான் இழந்தேன் மனம் நொந்து நான் அழுதேன் (2) மன்னாதி மன்னன் மனதுருகும் மனுமகன் நீர் இயேசுவே (எல்லாம் நீர் இயேசுவே...)