198
எந்தன் ஜெபவேளை
எந்தன் ஜெபவேளை உமைத்தேடி வந்தேன் தேவா பதில் தாருமே எந்தன் கோட்டை எந்தன் தஞ்சம் நீரே உம்மை நான் நாடி வந்தேன் (எந்தன் ஜெபவேளை...) உம்மோடு எந்நாளும் உறவாட அருள் செய்யுமே கர்த்தாவே உம் வார்த்தையை கேட்டிட காத்திருப்பேனே (எந்தன் ஜெபவேளை...) நம்பிக்கை இல்லாமல் அழிகின்ற மாந்தர்களை மீட்டிடும் என் இயேசுவே போராடி ஜெபிக்கின்றேன் நாதா (எந்தன் ஜெபவேளை...) நாளெல்லாம் பாதத்தில் கர்த்தாவே அமர்ந்திருப்பேன் கண்ணீரின் ஜெபம் கேளுமே கருணையின் பிரவாகம் நீரே (எந்தன் ஜெபவேளை...) சகாயம் பெற்றிட கிருபாசனம் வந்தேனே இரக்கங்கள் ஈந்திடுமே என்றென்றும் தயை காட்டும் தேவா (எந்தன் ஜெபவேளை...)