200
என் இரட்சகா என் இயேசுவே
என் இரட்சகா என் இயேசுவே என்னை அழைத்த நல் மீட்பரே என் உள்ளத்தில் சந்தோஷத்தை தந்தவா உம்மை ஸ்தோத்தரிப்பேன் பாக்கிய நாள் பாக்கிய நாள் இயேசு என் பாவம் தீர்த்த நாள் (2) சத்திய ஜீவன் வழியும் நீரே கிருபை கூர்ந்து தெரிந்தீரே (2) தேவனே உம்மில் இணைந்து இருக்க இன்றும் என்றும் அருள் செய்வீரே (2) (பாக்கிய நாள்...) இருளினின்று ஒளியினிடமாய் அழைத்த தேவனே போற்றுவேன் (2) உந்தனின் புண்ணியம் யாவும் சொல்லி சாட்சியாக பூவில் திகழ்வேன் (2) (பாக்கிய நாள்...) எந்தன் கால்கள் தளரும்போது தாங்கி என்னை மீட்டவா (2) உந்தனின் வாக்கு வெளிச்சம் தந்து காத்து என்றும் நடத்துவீரே (2) (பாக்கிய நாள்...)