Home
201

பாடிடுவேன் போற்றிடுவேன்

          பாடிடுவேன் போற்றிடுவேன்
பாதத்தில் பணிந்து நான் வணங்கிடுவேன்
ஆதி அந்தம் பெயர் சொல்லி
அன்புடனே நீர் அழைத்து
ஆதரவாய் என்னை நடத்திடும் உம் புகழ்

(பாடிடுவேன்...)

நெஞ்சத்திலே நிறைந்ததெல்லாம்
நீங்காத உம் நினைவே
ஆண்டவரே என் இயேசுவே
ஆளுகின்றீர் என் இதயத்தையே (4)
அச்சமில்லை அதிர்ச்சியில்லை (1)
அலைந்திடும் கடலலை ஓய்ந்திடும் வரையில் நான்

(பாடிடுவேன்...)

இலையுதிர்ந்த மரமதைப்போல்
நான் தனியே வாடினாலும்
நிலைகுலைய விடமாட்டீர்
எனதருகில் இருக்கின்றீர் (4)
அச்சமில்லை அதிர்ச்சியில்லை (1)
அலைந்திடும் கடலலை ஓய்ந்திடும் வரையில் நான்

(பாடிடுவேன்...)
        

Listen to the Song

Song 201
0:00 / 0:00
Speed:

Share this Song