Home
202

என் தேவா உம்மைப்

          என் தேவா உம்மைப் பாடுவேன் - இனி
என்றென்றும் ஸ்தோத்தரிப்பேன்
என்னுயிரே எந்தன் இயேசுவே - முழு
மனதால் ஸ்தோத்தரிப்பேன்

எனது வலது பக்கம் நீரே
அசைக்கப்படுவதில்லை நானே
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் (1)

(என் தேவா உம்மைப்...)

செய்த நன்மைகள் உலகம் கொள்ளாதே
எந்தன் வாழ்வினிலே (2)
நினைத்து நினைத்து நன்றி சொல்லத்தானே
ஆயுள் போதாதே (2)

மலர் போல் உதிர்கின்ற வாழ்வை
நன்றி சொல்லி கழித்திடுவேன்

(என் தேவா உம்மைப்...)

உண்மையாய் உம்மைக் கூப்பிடும் போது
நெருங்கி அருகில் வந்தீர் (2)
உருகி உருகி ஜெபித்திடும்போது
உன்னத பெலன் அளித்தீர் (2)
உலகத்தையே நான் மறந்து
உம்மையே நினைத்திடுவேன்

(என் தேவா உம்மைப்...)
        

Listen to the Song

Song 202
0:00 / 0:00
Speed:

Share this Song