203
ஸ்தோத்திரம் சொல்லிப்
ஸ்தோத்திரம் சொல்லிப் பாடி - இயேசுவை எந்நேரமும் துதிப்போம் அல்லேலூயா துதி சொல்லி - இயேசுவை என்றென்றும் ஆர்ப்பரிப்போம் அல்லேலூயா அல்லேலூயா (1) (ஸ்தோத்திரம் சொல்லி...) துதிகளின் நடுவினில் வாசம் செய்வார் துதிக்கின்ற உள்ளமதைத் தேடி வருவார் துதிகளை நாவினில் நிரம்பச் செய்வார் ஸ்தோத்திர பலியினால் மகிமைப்படுவார் இயேசுவின் நாமத்தை உயர்த்திடவே நாம் ஒருமித்துக் கூடிடுவோம் (2) (ஸ்தோத்திரம் சொல்லி...) துதிசெய்யத்தானே நாமும் பிறந்தோம் இதைச் செய்ய ஏனோ தினமும் மறந்தோம் துதியுடன் இசையை முழங்கச் செய்வோம் தூதரை விட நாம் எழும்பி துதிப்போம் ஆர்ப்பரித்தே அவர் நாமத்தையே துதி பாடி கொண்டாடிடுவோம் (2) (ஸ்தோத்திரம் சொல்லி...) தேவனின் நாமம் மகிமைப் படவே ஸ்தோத்திரத்தாலே கிருபை பெருகும் உதடுகள் கனியே ஸ்தோத்திர பலியே உயிருள்ள வரையே நாவில் சொல்லியே நடனத்திலே புது பாட்டினிலே நாம் கர்த்தரைத் துதித்திடுவோம் (2) (ஸ்தோத்திரம் சொல்லி...)