204
நீரன்றி வேறில்லை ஐயா
நீரன்றி வேறில்லை ஐயா
எல்லாமே நீர் தானே
உடலும் உள்ளமெல்லாம் உயிரெல்லாம் நீர் தானே
(நீரன்றி வேறில்லை...)
உம்மை நாடி நாடி தினம்
பாடி பாடி மகிழ்வேன்
உந்தன் பாதம் தேடி தினம்
ஓடி ஓடி வருவேன்
(நீரன்றி வேறில்லை...)
துன்ப வேளையில் வேண்டிடும்போது
நல்ல துணை நீரே
தாங்கா துயரில் தவித்திடும்போது
தாங்கும் பெலன் நீரே (4)
எந்தக் காலத்திலும் உம்மை ஸ்தோத்தரிப்பேன்
எந்த வேளையிலும் நினைப்பேன்
ஒரு இமைப்பொழுதும் உம்மை மறந்திடாமல்
என் வாழ்வினில் இனி
(உம்மை நாடி நாடி...)
பாவ பாதையில் பாரினில் அலைய
தேடி வந்தவரே
பாவி எனக்காய் சிலுவையில் தொங்கி
வாழ்வு தந்தவரே (4)
உயிருள்ளவரை என் உன்னதரை
உயிரோடு கலந்திடுவேன்
இரவும் பகலும் இதயம் நிறுத்தி
இசை கானம் பாட
(உம்மை நாடி நாடி...)