Home
206

நெஞ்சமெல்லாம் நீரே நிறை

          நெஞ்சமெல்லாம் நீரே நிறைந்திருப்பீர் தேவா
எண்ணி மகிழ்வேனே உமது அன்பை
என்றும் மறவேனே உமது அன்பை

(நெஞ்சமெல்லாம்...)

நீரோடை வாஞ்சிக்கும் மான்களைப் போலவே
கர்த்தரின் சமூகத்தைத் தேடிடுவேன் (2)
காலையும் மாலையும் தேவனின் பிரசன்னம்
என்னை நிரப்பும் மகிமையே (2)

(நெஞ்சமெல்லாம்...)

எண்ணில் அடங்காத நன்மைகள் எனக்கு
செய்தவரே உம்மை துதித்திடுவேன் (2)
இராச்சாமத்திலும் விழிப்புடன் இருப்பேன்
நேசரின் வருகைக்காய் காத்திருப்பேன் (2)

(நெஞ்சமெல்லாம்...)

மன்னவரின் லோகம் நான் மலரடி சேர
என்னை வழிநடத்தும் உமது வேதம் (2)
சொன்ன மொழி யாவும் என்னில் நிறைவேறும்
சத்திய வார்த்தைகள் நிச்சயமே (2)

(நெஞ்சமெல்லாம்...)
        

Listen to the Song

Song 206
0:00 / 0:00
Speed:

Share this Song