Home
207

இயேசுவின் நாமத்தை

          இயேசுவின் நாமத்தை ஸ்தோத்தரிப்பேன்
ஸ்தோத்தரிப்பேன்
என்ன வந்தாலும் அஞ்சிடேன் நான்
ஸ்தோத்தரிப்பேன்

(இயேசுவின் நாமத்...)

தேவன் பாதம் அமர்ந்து அவர் வார்த்தைகள் கேட்பேன்
தினமும் அவரின் முகத்தின் தரிசனம் பெறுவேன் (2)
இயேசு ராஜனே என் இதய கீதமே
நேசரின் அன்பை எந்நாளும் பாடுவேன் (2)

(இயேசுவின் நாமத்...)

தேவா உந்தன் கிருபை அது எனக்கும் போதுமே
என்னை வழிநடத்தும் உமது கரமே (2)
உமது கண்களில் நான் இரக்கம் பெற்றேனே
என் ஆயுள் முழுவதும் சங்கீதம் பாடுவேன் (2)

(இயேசுவின் நாமத்...)

மனமோ தளராது தேவமகிமையைப் புகழ்வேன்
சந்தோஷம் மகிழ்ச்சி அதனால் அடைவேன் (2)
இயேசு தேவனே என்னில் உயிர் வாழ்கிறார்
அவர் பிரசன்னத்தால் நானும் பிரகாசிப்பேன் (2)

(இயேசுவின் நாமத்...)
        

Listen to the Song

Song 207
0:00 / 0:00
Speed:

Share this Song