209
தூக்கி எடுத்து என்னை
தூக்கி எடுத்து என்னை அழைத்த தூயவரை நான் பாடுவேன் தூயவரை நான் பாடுவேன் (தூக்கி எடுத்து...) உலகத்தின் பாதையிலே நான் ஓடினேன் ஓட்டமாக (2) சிலுவை சுமந்தவர் என்னை அழைத்ததும் திரும்பி வந்தேன் (2) (தூக்கி எடுத்து...) உலகத்தை சார்ந்திருந்தேன் என் உறவை நம்பிருந்தேன் (2) அவர் குரல் கேட்டவுடன் நான் எல்லாமே மறந்துவிட்டேன் (2) (தூக்கி எடுத்து...) இதுவரை காத்து வந்தீர் என்னை இனிமேலும் நடத்திடுவீர் (2) செழிப்பாய் மாற்றிடுவார் நான் களிகூர்ந்து துதித்திடுவேன் (2) (தூக்கி எடுத்து...)