212
பாடுங்கள் அல்லேலூயா கூடுங்கள்
பாடுங்கள் அல்லேலூயா கூடுங்கள் சபைதனில்
எல்லோரும் கைதட்டி நடமாடி உற்சாகத்தோடு
பாடுங்கள் அல்லேலூயா கூடுங்கள் சபைதனில்
கரம் நீட்டி அன்பாலே அழைத்திடும் நம் இரட்சகரை
(பாடுங்கள் அல்லேலூயா...)
இந்த மா சந்தோசம் உள்ளத்தின் தாளம்
இயேசுவே உம்மை வாழ்த்திடும் ராகம் (2)
ராகம் தாளத்தோடு என்றும் போற்றி
ஓ…ஓ... இஸ்ரவேலின் இராஜாவை நாம் வாழ்த்தி (2)
(பாடுங்கள் அல்லேலூயா...)
குரலை உயர்தி சந்தோசத்தோடு
ஸ்தோத்திரம் சொல்லி தேவனைத் துதி (2)
பாவ பாரம் எல்லாம் நீக்கி நம்மை
ஓ...ஓ... மோட்ச வீடு சேர்த்திடுவார் உண்மை (2)
(பாடுங்கள் அல்லேலூயா...)