213
சபிக்கப்பட்ட சிலுவையிலே
சபிக்கப்பட்ட சிலுவையிலே சர்வ வல்லவர் தொங்குகின்றார் பாரினைப் படைத்தவர் பாதங்கள் ரண்டும் பதிய வழியின்றித் தொங்குகின்றார் (2) சபிக்கப்பட்ட சிலுவையிலே.... வார்த்தையில் உலகைப் படைத்தவர் வாய் திறவாத ஆட்டினைப் போல் வாரினால் அடிகளை வாங்கிக்கொண்டே வலம் வருகின்றார் வதீகளில் (2) வலம் வருகின்றார் வீதிகளில் சபிக்கப்பட்ட சிலுவையிலே... வஞ்சகன் கள்வன் என்னிமித்தம் வானபராபரன் அடிக்கப்பட்டார் ஆக்கினையாம் என் மரணத்தையே ஆண்டவர் இயேசுவே ஏற்றுக்கொண்டார் (2) ஆண்டவர் இயேசுவே ஏற்றுக்கொண்டார் சபிக்கப்பட்ட சிலுவையிலே… உணர்வில்லையோ மனம் உருகலையோ உனக்காய் உத்தமர் நொறுக்கப்பட்டார் உதிரத்தால் உன்னைக் கழுவிக்கொண்டே ஒன்றும் வேண்டாம் உந்தனைத் தா (2) ஒன்றும் வேண்டாம் உந்தனைத் தா (சபிக்கப்பட்ட சிலுவையிலே...)