Home
214

பாடுவோம் நம் தேவனை

          பாடுவோம் நம் தேவனை
புதுப் பாடல் பாடியே (2)
அவர் நல்லவர் நன்மை செய்பவர் சர்வ வல்லவர்
அவர் அதிசயமானவர் (1)

(பாடுவோம் நம் தேவனை...)

சகல ஜனமே கைகொட்டி கர்த்தரை
கெம்பீரமாய் பாடுவோம்
சுரமண்டலம் மேளதாளங்கள்
முழங்கியே துதித்திடுவோம்
தாழ்வில் நம்மை நினைத்தாரே
பேர் சொல்லியே அழைத்தாரே (2)

(பாடுவோம் நம் தேவனை...)

கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும்
உள்ளதென்றே சொல்லுவோம்
அவர் கிருபை மாறாதது
என்றென்றும் நிலையானது
காலைதோறும் புதிதானது
நம்மை விட்டு விலகாதது (2)

(பாடுவோம் நம் தேவனை...)

அப்பா பிதாவே என்றே அழைக்கும்
பாக்கியம் கொடுத்தாரே
அவர் பிள்ளையாய் நாம் மாறிட
கிருபையும் பொழிந்தாரே
பாவங்களை மன்னித்தாரே
பரிசுத்தமாய் மாற்றினாரே (2)

(பாடுவோம் நம் தேவனை...)
        

Listen to the Song

Song 214
0:00 / 0:00
Speed:

Share this Song