Home
215

ஜீவனுள்ள நாட்களெல்லாம்

          ஜீவனுள்ள நாட்களெல்லாம்
இயேசுவுக்காய் வாழ்வோம்
இருப்பதுவோ ஒரு வாழ்வு - அதை
அவருக்கு கொடுத்திடுவோம் (4)

வாழ்ந்திடுவோம் நாம் வாழ்ந்திடுவோம்
இயேசுவுக்காக வாழ்ந்திடுவோம் (2)

(ஜீவனுள்ள நாட்களெல்லாம்...)

இயேசுவும் தனக்காய் வாழாமல் - அவர்
நமக்காய் தானே வாழ்ந்தாரே
உயிரையும் கூட நமக்குத் தந்தாரே
இதற்கு பதிலாய் என்ன செய்வோமே
நாமும் வாழ்ந்திடுவோம் இயேசுவுக்காய்

(ஜீவனுள்ள நாட்களெல்லாம்...)

ஊழியம் செய்வது பாக்கியமே - அதின்
பலனோ இன்று நாம் அறியோமே
கர்த்தர் ஓர் நாள் வந்திடுவாரே
அன்று இதன் பலன் கொண்டு வருவாரே
கண்டு மகிழ்ந்திடுவோம் - துள்ளிடுவோம்

(ஜீவனுள்ள நாட்களெல்லாம்...)

யாரோ செய்யட்டும் எனக்கென்ன - நான்
நலமாய் இருந்தால் அதுபோதும்
என்றே சுயமாய் வாழ்வதினாலே
பின்னால் நீயும் வருந்திடுவாயே
என்று உணர்வாயோ இன்றே வா

(ஜீவனுள்ள நாட்களெல்லாம்...)

உலகத்தையே சொந்தமாக்கினாலும்
அதினாலே லாபம் ஒன்றுமில்லையே
இயேசுவுக்காய் நீ எதை செய்தாயோ - அதுவே
உனக்கு உதவிடும் என்றும்
ஓயாது உழைத்திடுவோம் இயேசுவுக்காய்

(ஜீவனுள்ள நாட்களெல்லாம்...)
        

Listen to the Song

Song 215
0:00 / 0:00
Speed:

Share this Song