Home
216

மேசியா இயேசு ராஜா

          மேசியா இயேசு ராஜா
அவர் மீண்டும் வருகிறார்
எந்தன் ஆவல் தீர்க்க
அவர் சீக்கிரம் வருகிறார்
அவர் முகமே நான் கண்டிடுவேன்
அவரோடு நானும் சென்றிடுவேன்
மகிமை மகிமை அந்த நாள் மகிமை

(மேசியா இயேசு ராஜா...)

தேவனின் வருகையில் என் துக்கமெல்லாம்
சந்தோஷமாகவே மாறியே போகும்
தேவனுக்காய் பட்ட பாடுகளெல்லாம்
மகிமையாய் அன்று மாறிடுமே
இன்று காணும் பாடுகள் இனிமேல் வருகின்ற
மகிமைக்கு ஈடாய் ஆகுமோ

(மேசியா இயேசு ராஜா...)

இயேசுவுக்காய் நான் காத்திருக்கின்றேன்
ஆயத்தமாய் எதிர் பார்த்திருக்கின்றேன்
இனியும் தாமதம் செய்யாரே - அவர்
சொன்னபடி வந்திடுவார் - அந்த
நாளில் அவரை கண்டு நானும்
ஆடுவேன் பாடுவேன் துள்ளுவேன்

(மேசியா இயேசு ராஜா...)

எனக்காவே இரத்தம் சிந்தின கரத்தை
கண்டு ஆயிரம் முத்தங்களிடணும்
சிலுவை சுமந்து நடந்த பாதம்
விழுந்து நன்றி சொல்லிடணும்
இந்த தியாகம் செய்த அன்பு முகமே
காண ஏங்குகின்றேன்

(மேசியா இயேசு ராஜா...)
        

Listen to the Song

Song 216
0:00 / 0:00
Speed:

Share this Song