Home
218

ஆவியோடும் உண்மையோடும்

          ஆவியோடும் உண்மையோடும்
ஆண்டவரை தொழுதிடுவோம் (2)
பரிசுத்த அலங்காரத்துடனே நாமும்
பரிசுத்தரை தொழுவோமே (2)

(ஆவியோடும் உண்மை...)

நடுக்கத்தோடும் பயபக்தியோடும்
கர்த்தரில் களி கூறுவோம்
பணிந்து குனிந்து தலைகள் தாழ்த்தி
பாதம் பணிந்திடுவோம்
அவர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
பரிசுத்தரிடம் பாவமில்லையே அவர்
பரிசுத்தம் எனக்கில்லையே

(ஆவியோடும் உண்மை...)

ஆர்வத்தோடும் ஆனந்தத்தோடும்
சந்நிதி வாருங்களே
கர்த்தரே தேவன் மகாராஜன்
என்றே சொல்லுங்களே
அவர் வாசலில் துதியோடும் புகழ்ச்சியோடும்
வந்து கீர்த்தனம் பண்ணுங்களே
துதி பலிகளை செலுத்துங்களே

(ஆவியோடும் உண்மை...)

உதட்டிலல்ல உள்ளத்திலிருந்து
ஸ்தோத்திர பலியிடுவோம்
ஒன்று கூடி ஒரு மனமாய்
பாடி புகழ்ந்திடுவோம்
அவரே தேவன் நாம் அவர் ஆடுகளே
அவர் சத்தியம் மேய்ந்திடுவோம்
அதில் என்றென்றும் நிலைத்திருப்போம்

(ஆவியோடும் உண்மை...)
        

Listen to the Song

Song 218
0:00 / 0:00
Speed:

Share this Song