Home
22

இயேசு ராஐனின் திருவடிக்கே

          இயேசு ராஜனின் திருவடிக்கே
சரணம் சரணம் சரணம்
ஆத்ம நாதனின் மலரடிக்கே
சரணம் சரணம் சரணம்

பார் போற்றும் தூய தூய தேவனே
மெய் ராஜனே எங்கள் நாதனே
பயம் யாவும் நீக்கும் துணையானீரே
சரணம் சரணம் சரணம்

(இயேசு ராஜனின்...)

இளைப்பாறுதல் தரும் வேந்தனே
இன்னல் துன்பம் நீக்கும் அருள் நாதரே
ஏழை என்னை ஆற்றித் தேற்றிக் காப்பீரே
சரணம் சரணம் சரணம்

(இயேசு ராஐனின்...)

பெலவீனம் யாவும் போக்கும் வல்லோரே
பெலனீந்து வலக்கரம் பிடிப்பீரே
ஆவி ஆத்மா சரீரத்தைப் படைக்கிறேன்
சரணம் சரணம் சரணம்

(இயேசு ராஜனின்...)

உந்தன் சித்தம் செய்ய அருள் தாருமே
எந்தன் சித்தம் யாவும் என்றும் ஒழிப்பீரே
சொந்தமாக ஏற்று என்னை ஆட்கொள்ளும்
சரணம் சரணம் சரணம்

(இயேசு ராஜனின்...)

மாதூய தூயரெனப் போற்றிடும்
விண் தூதரோடே நாமும் போற்றுவோம்
மா தேவ சபை பூவில் வாழ்த்தவே
சரணம் சரணம் சரணம்

(இயேசு ராஜனின்...)
        

Listen to the Song

Song 22
0:00 / 0:00
Speed:

Share this Song