220
உலகில் மாறா அன்பு
உலகில் மாறா அன்பு ஒன்று அது இயேசுவிடம் நாம் கண்ட அன்பு அது இயேசு அன்பு அது இயேசு அன்பு கல்வாரி சிலுவை தந்த அன்பு (உலகில் மாறா ...) உலக வாழ்வு வெறுத்த அன்பு உண்மையின் இரகசியம் தெரிந்த அன்பு (2) இருண்ட வாழ்வில் ஒளிர்ந்த அன்பு (1) வறண்ட வாழ்வு செழித்த அன்பு (1) அது இயேசு அன்பு அது இயேசு அன்பு கல்வாரி சிலுவை தந்த அன்பு (உலகில் மாறா...) நித்திய வாழ்வு தந்த அன்பு நித்தமும் எம்மை காக்கும் அன்பு (2) வாழ்வில் வெற்றி தந்த அன்பு (1) வல்லவர் என்றும் காக்கும் அன்பு (1) அது இயேசு அன்பு அது இயேசு அன்பு கல்வாரி சிலுவை தந்த அன்பு (உலகில் மாறா...) கருணையுள்ளம் கொண்ட அன்பு கண்மணி போலக் காக்கும் அன்பு (2) கனிதரும் கொடியாய் படர்ந்த அன்பு (1) கரும்பாய் என்றும் இனிக்கும் அன்பு (1) அது இயேசு அன்பு அது இயேசு அன்பு கல்வாரி சிலுவை தந்த அன்பு (உலகில் மாறா...)