222
நீர் செய்த உபகாரங்களு
நீர் செய்த உபகாரங்களுக்காய் நான் என்ன செலுத்திடுவேன்? (2) ஆயிரம் ஆடுகளா? பதினாயிரம் காளைகளா? (1) நீர் செய்த உபகாரங்களுக்காய் நான் என்ன செலுத்திடுவேன்? ஆயிரம் நதிபோல பாய்கின்ற தைலத்தை உம்மில் ஊற்றினால் போதுமா? (2) கற்பக் கனியான என் நேசபுத்திரனை உமக்கீர்ந்தாலும் போதுமா? (2) நீர் செய்த உபகாரங்களுக்காய் நான் என்ன செலுத்திடுவேன்... மரண தண்டனை தீர்க்கவே எனக்காய் மரித்தீரே திருச்சிலுவையில் (2) இரக்கம் காட்டி உம் நல்ல பாதையில் நடத்திடும் என் இயேசுவே (2) நீர் செய்த உபகாரங்களுக்காய் நான் என்ன செலுத்திடுவேன்... நொறுங்குண்ட இதயத்தை பலி யாகமாக நான் இன்றே படைக்கிறேன்றேனே (2) இரட்சிப்பின் பாத்திரத்தை என் கையில் ஏந்தி அனுதினம் பின்செல்லுவேன் (2) நீர் செய்த உபகாரங்களுக்காய் நான் என்ன செலுத்திடுவேன்? (2) ஆயிரம் ஆடுகளா? பதினாயிரம் காளைகளா? (1) நீர் செய்த உபகாரங்களுக்காய் இதயத்தை தந்தம் செய்வேன் (1)