224
நான் பாவிதான் ஆனாலும் நீர்
நான் பாவி தான் ஆனாலும் நீர் இரத்தம் சிந்தினீர் இன்று உம் பிள்ளை நான் - இயேசைய்யா இன்று உம்பிள்ளை நான் (நான் பாவி...) கல்வாரியின் மலைமீதிலே உம் பாடுகள் எனக்காகத்தான் (2) உம் கை காலிலே காயம் எல்லாம் நான் செய்த பாவம் ஐய்யா (2) (நான் பாவி தான்...) கன்னங்களில் வழிந்தோடிடும் கண்ணீரும் எனக்காகத்தான் (2) உம் கை காலிலே வழிந்தோடிடும் திரு இரத்தம் எனக்காகத்தான் (2) (நான் பாவி தான்...) மூன்றாணியால் என் பாவங்கள் சுமந்து தீர்த்தீரைய்யா (2) மூன்றாநாளில் எனக்காகவே உயிரோடு எழுந்தீரைய்யா (2) (நான் பாவி தான்...) நான் பாவி அல்ல எனக்காகத் திரு இரத்தம் சிந்தினீர் இன்று உம் பிள்ளை நான் - இயேசைய்யா என்றும் உம் பிள்ளை நான்