Home
226

உன்னை அதிசயம்

          உன்னை அதிசயம் காணச் செய்வேன்
நீ அற்புதம் கண்டிடுவாய் (2)
என்று வாக்களித்தார் தேவன்
இன்று நிறைவேற்ற வந்துவிட்டார் (2)

(உன்னை...)

வழி திறக்கும் அதிசயம் நடந்திடுமே
செங்கடலும் பிளந்தே வழிவிடுமே (2)
தடைகளெல்லாம் தகர்ந்தே போகுமே
இடைஞலெல்லாம் இன்றே மறைந்திடுமே (2)

(உன்னை...)

குறைகளெல்லாம் நிறைவாகும் அதிசயமே
இறைமகனாம் இயேசுவால் நடந்திடுமே (2)
வாதையெல்லாம் மறைந்தே போகுமே
பாதையெல்லாம் நெய்யாய்ப் பொழிந்திடுமே (2)

(உன்னை...)

வழி நடத்தும் அதிசயம் நடந்திடுமே
காரிருளில் பேரொளி வீசிடுமே (2)
வனாந்திரமே வழியாய் வந்தாலும்
வல்லவரின் கரமே நடத்திடுமே (2)

(உன்னை...)
        

Listen to the Song

Song 226
0:00 / 0:00
Speed:

Share this Song