227
கேருபீன் சேராபீன்கள்
கேருபீன் சேராபீன்கள் ஓய்வின்றி உமைப்போற்றுதே
பூலோக திருச்சபையெல்லாம் ஓய்வின்றி உமைப்போற்றிட
(கேருபீன்...)
நீர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்
எங்கள் பரலோக ராஜாவே
இந்த வானம் பூமி உள்ளோர் யாவும்
உந்தன் நாமத்தை உயர்த்தட்டுமே (4)
(கேருபீன்...)
பூமி அனைத்திலும் உந்தன் மகிமை
நிறைந்து வழிகின்றதே
ஆலயத்திலும் உந்தன் மகிமை
அலையலையர் அசைகின்றதே
துதி கன மகிமைக்குப் பாத்திரர்
எல்லா புகழும் உமக்குத்தானே (2)
(நீர் பரிசுத்தர்...)
வானம் உமது சிங்காசனம்
பூமி உந்தன் பாதபடி
நாங்கள் உந்தன் தேவஆலயம்
நீர் தங்கும் தூயஸ்தலம்
சகலமும் படைத்த எம் தேவா
நீர் நித்திய சிருஷ்டிகரே (2)
(நீர் பரிசுத்தர்...)
பரலோகத்தில் உம்மை அல்லா
யார் உண்டு தேவனே
பூலோகத்தில் உம்மைத் தவிர
வேறொரு விருப்பமில்லை
என்றும் உம்மோடு வாழ
எம்மை உமக்காய் தெரிந்தெடுத்தீர் (2)
(நீர் பரிசுத்தர்...)