228
காக்கும் தெய்வம்
காக்கும் தெய்வம் இயேசு இருக்க கலக்கம் ஏன் மனமே கண்ணீர் ஏன் மனமே கண்ணீர் ஏன் மனமே (3) இதுவரை உன்னை நடத்தின தேவன் இனியும் நடத்தி செல்வார் எபிநேசர் அவர்தானே (2) எபிநேசர் அவர்தானே (காக்கும் தெய்வம்...) சிலுவை சுமந்தால் சுபாவம் மாறும் தெரிந்து கொள் மனமே சீடன் அவன்தானே (2) சீடன் அவன்தானே (காக்கும் தெய்வம்...) பாடுகள் சகித்தால் பரமனின் வருகையில் கூட சென்றிடலாம் பாடி மகிழ்ந்திடலாம் (2) பாடி மகிழ்ந்திடலாம் (காக்கும் தெய்வம்...) காண்கின்ற உலகம் நமது இல்லை காணாத பரலோகம்தான் நமது குடியிருப்பு (2) நமது குடியிருப்பு (காக்கும் தெய்வம்...)