Home
229

சிலுவை சுமந்தார் உன்

          சிலுவை சுமந்தார் உன் ஆண்டவர்
அலைமோதும் உனைத் தேடி வருகிறார்
நிலையான இன்பங்கள் நீ பெறவே
பலியாகி உயிர்த்தவர் அழைக்கின்றார்

நீ தேடும் நிம்மதி இயேசுவில்தான்
நீ தேடும் விடுதலை இயேசுவில்தான்
நீ தேடும் ஆரோக்கியம் சந்தோஷமும்
அன்பும் அமைதியும் இயேசுவில்தான்

பாவங்களால் மன சஞ்சலமோ
வியாதிகளால் வந்த வேதனையோ
கைவிடப்பட்டதால் கலக்கமோ
விடுவித்துக் காத்திட அழைக்கிறார்

(நீ தேடும்...)

வாழ்வெல்லாம் வீழ்ச்சி தோல்வியோ
விடுதலை நீ காணாத ஏக்கமோ
தாழாத துயரமோ கண்ணீர்தானோ
வாழ்விக்க தம் கரம் நீட்டுகின்றார்

(நீ தேடும்...)

அடைக்கலம் இயேசுவின் பொற்கரமே
அன்பின் நெஞ்சே உன் தாபரமே
கிருபையின் வேளையை உதறிடாதே
அற்புதர் உன்னை அழைக்கிறார்

(நீ தேடும்...)
        

Listen to the Song

Song 229
0:00 / 0:00
Speed:

Share this Song