Home
23

தொழுகிறோம் எங்கள் பிதாவே

          தொழுகிறோம் எங்கள் பிதாவே
பொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே (2)
பரிசுத்த அலங்காரத்துடனே
தரிசிப்பதினால் சரணம் சரணம் (2)

(தொழுகிறோம் எங்கள்...)

வெண்மையே பரிசுத்தமானவர்
உண்மையே உருவாய்க் கொண்டவர் (2)
என்னையே மீட்டுக்கொண்டவர்
அண்ணலே இதோ சரணம் சரணம் (2)

(தொழுகின்றோம் எங்கள்...)

அடியார்களின் அஸ்திபாரம்
அறிவுக்கெட்டாத விஸ்தாரம் (2)
கூடி வந்த எம் அலங்காரம்
கோடா கொடியாம் சரணம் சரணம் (2)

(தொழுகிறோம் எங்கள்...)

பார்த்திபனே கன ஸ்தோத்திரம்
கீர்த்தனம் மங்களம் ஸ்தோத்திரம் (2)
வாழ்க வாழ்க வாழ்க என்றும்
அல்லேலூயா ஆமென் ஆமென் (2)

(தொழுகிறோம் எங்கள்...)
        

Listen to the Song

Song 23
0:00 / 0:00
Speed:

Share this Song