232
என் வாழ்வில் எல்லாமே
என் வாழ்வில் எல்லாமே இயேசுதான் எந்நாளும் எந்நாளும் இயேசுதான் (2) என் முன்னும் என் பின்னும் இயேசுதான் என் மூச்சிலும் பேச்சிலும் இயேசுதான் விண்ணிலிருந்து மண்ணில் வந்தவர் இயேசுதான் என்னை மீட்கத் தன்னைத் தந்தவர் இயேசுதான் (2) அவர் நாமம் நான் பாட (1) அன்பு காட்டி ஆற்றல் தந்தவர் இயேசுதான் (என் வாழ்வில்...) ஆற்றல் அனைத்தும் எனக்குத் தந்தவர் இயேசுதான் ஆதரவாய் காத்து நிற்பவர் இயேசுதான் (2) அன்புத் தாயாய் எனைச் சேயாய் (1) காலமெல்லாம் காத்துநிற்பவர் இயேசுதான் (என் வாழ்வில்...) வானம் பூமி ஆள வந்தவர் இயேசுதான் வாழும் யாவும் வாழ்ந்திருப்பது இயேசுதான் ஒருநாளில் இவை யாவும் (1) சங்கமிக்கும் சங்கொலிக்கும் இயேசுதான் (என் வாழ்வில்...)