Home
233

உம் பாதம் பணிந்தேன்

          உம்பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே
உம்மையன்றி யாரைப் பாடுவேன் - இயேசையா
உந்தன் அன்பு உள்ளம் பொங்குதே (1)

(உம் பாதம்...)

பரிசுத்தமே பரவசமே
பரனேசருளே பரம் பொருளே (2)
தேடினதால் கண்டடைந்தேன்
பாடிடப் பாடல்கள் ஈந்தளித்தீர் (2)

(உம் பாதம்...)

நெருக்கத்திலே உம்மை அழைத்தேன்
நெருங்கி உதவி எனக்களித்தீர் (2)
திசைக்கெட்டெங்கும் அலைந்திடாமல்
தீவிரம் வந்தென்னைத் தாங்குகின்றீர் (2)

(உம் பாதம்...)

என் இதய தெய்வமே நீர்
எனது இறைவா! ஆருயிரே (2)
நேசிக்கிறேன் இயேசுவே உம்
நேசமுகம் என்று கண்டிடுவேன் (2)

(உம் பாதம்...)
        

Listen to the Song

Song 233
0:00 / 0:00
Speed:

Share this Song