Home
234

எஜமானனே எஜமானனே

          எஜமானனே என் இயேசு ராஜனே (1)
எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம்
உம் சித்தம் செய்வதுதானே - என் (2)
எஜமானனே எஜமானனே
என் இயேசு ராஜனே

உமக்காகத்தான் வாழ்கிறேன்
உம்மைத்தான் நேசிக்கிறேன் (2)
பலியாகி எனை மீட்டீரே (1)
பரலோகம் திறந்தீரைய்யா (1)

(எஜமானனே...)

உயிர் வாழும் நாட்களெல்லாம்
ஓடி ஓடி உழைத்திடுவேன் - நான் (2)
அழைத்தீரே உம் சேவைக்கு - என்னை (1)
அதை நான் மறப்பேனோ (1)

(எஜமானனே...)

அப்பா உம் சந்திதியில்தான்
அகமகிழ்ந்து களிகூருவேன் (2)
எப்போது உம்மைக் காண்பேன் - நான் (1)
ஏங்குதய்யா என் இதயம் (1)

(எஜமானனே...)

என் தேச எல்லையெங்கும்
அப்பா நீர் ஆள வேண்டும் (2)
வறுமை எல்லாம் மாறணும் - தேசத்தின் (1)
வன்முறை எல்லாம் ஓழியணும் (1)

(எஜமானனே...)
        

Listen to the Song

Song 234
0:00 / 0:00
Speed:

Share this Song