235
என்னவர் இயேசுவே
என்னவர் இயேசுவே உம் மார்பில் சாய்ந்திடுவேன் என் உயிர் மீட்டவரே உம் தோளில் உறங்கிடுவேன் என்னோடென்றும் இருப்பவரே இதயத்தில் வாழ்பவரே என்னை என்றும் காப்பவரே இதயம் கவர்ந்தவரே (என்னவர்...) தாயும் தந்தையும் வெறுத்தாலும் தளர்ந்திடாமல் சேர்த்தீரே தோழர் என்னைப் பிரிந்தாலும் பிரிந்திடாமல் காத்தீரே நாளும் நேரமும் மாறிடினும் மாறாதிருப்பீரே சொந்தம் பந்தம் விலகிடினும் விலகாதிருப்பீரே தாயின் கருவில் தோன்றுமுன்னே தெரிந்தெடுத்தீர் என் தெய்வமே (என்னவர்...) எந்தன் வாழ்வின் வாஞ்சையெல்லாம் உந்தன் முகத்தைப் பார்ப்பதுதான் எந்தன் வாழ்வின் ஏக்கமெல்லாம் உம்மோடென்றும் இருப்பதுதான் மனதின் பாரம் போக்கிடுவீர் மகிழ்ச்சி தந்திடுவீர் துயரம் துக்கம் யாவையுமே நொடியில் மாற்றிடுவீர் மோட்ச லோக இன்ப வாழ்வை எனக்குத் தருவீர் என் இயேசுவே (என்னவர்...)