236
உன்னத தேவன்
உன்னத தேவன் உன்னுடன் இருக்க உள்ளமே கலங்காதே (2) அவர் உள்ளவரே என்றும் நல்லவரே நன்மைகள் குறையாதே (2) (உன்னத...) பாவத்தில் இருந்த உன்னை பரிசுத்தமாக்கியவர் (2) தாழ்மையில் கிடந்த உன்னை தம் தயவால் தூக்கியவர் (2) (உன்னத...) அந்நாளில் தம் பாதம் அமர்ந்த அன்னாளின் ஜெபம் கேட்டார் (2) அநாதையாய் தவித்த அந்த ஆகாரின் துயர் தீர்த்தார் (2) (உன்னத...) இயேசு உன் முன் நடந்தால் நீ ஜோர்தானில் நடந்திடலாம் (2) விசுவாசம் உனக்கிருந்தால் அந்த எரிகோவைத் தகர்த்திடலாம் (2) (உன்னத...)