237
சிலுவையே சிலுவையே
சிலுவையே சிலுவையே என் நேசர் செய்த
பாவம் என்னவோ (2)
பாவி நானிருக்க பரிசுத்தர்
பலியாவதோ (2)
(சிலுவையே...)
கன்னத்தில் அறைந்த பாவியிலும்
பெரும் பாவி நானல்லவா
காட்டிக் கொடுத்த யூதாசிலும்
கொடும் நீசன் நானல்லவா (4)
(சிலுவையே...)
படைத்த நேசரை மறந்தவனாய்
என் பாவத்தில் நான் அலைந்தேன்
பரிசுத்தர் தோள்மீது பார சிலுவையை
நானே தூக்கி வைத்தேன் (4)
(சிலுவையே...)