238
மனம் இரங்கும் தெய்வம்
மனம் இரங்கும் தெய்வம் இயேசு
சுகம் தந்து நடத்திச் செல்வார் (2)
யேகோவா ராபா இன்றும் வாழ்கிறார்
சுகம் தரும் தெய்வம் இயேசு சுகம் இன்று தருகிறார்
(மனம் இரங்கும்...)
பேதுரு வீட்டுக்குள் நுழைந்தார்
மாமி கரத்தை பிடித்துத் தூக்கினார் (2)
காய்ச்சல் உடனே அன்று நீங்கிற்று
அவள் கர்த்தர் தொண்டு செய்து மகிழ்ந்தாள் (2)
(யேகோவா ராபா...)
குஷ்டரோகியைக் கண்டார் இயேசு
கரங்கள் நீட்டித் தொட்டார் (2)
சித்தமுண்டு சுத்தமாகு - என்று
சொல்லித் சுகத்தைத் தந்தார் (2)
(யேகோவா ராபா...)
நிமிர முடியாத கூனி - அன்று
இயேசு அவளைக் கண்டார் (2)
கைகள் அவள் மேலே வைத்தார் - உடன்
நிமிர்ந்து குதிக்கச் செய்தார் (2)
(யேகோவா ராபா...)
பிறவிக் குருடன் பர்த்திமேயூ - அன்று
இயேசுவே இரங்கும் என்றான் (2)
பார்வை அடைந்து மகிழ்ந்தான் - உடன்
இயேசு பின்னே நடந்தான் (2)
(யேகோவா ராபா...)