239
என் உள்ளம் பொங்கும்
என் உள்ளம் பொங்கும் துதியின் சத்தங்கள் என் இயேசு ராஜா புகழைச் சொல்லுமே கர்த்தர் செய்த நன்மைகள் என்னால் மறக்கக் கூடுமோ (1) நாள் தோறும் நன்றி சொல்லுவேன் (1) (என் உள்ளம்...) வலது கரமே என்றும் நன்மை செய்வாரே பயங்கரங்கள் சூழ்ந்தாலும் பாதுகாப்பாரே - கர்த்தர் (2) கூர்மையான அம்புகள் சத்துரு எய்தாலும் (1) கவனமாக பாதுகாத்து என்னைக் காப்பாரே (1) (என் உள்ளம்...) சொல்ல ஆகுமே அருள் ஆசி தந்தாரே வெல்லும் வல்லமை அவர் வேத வசனமே - கர்த்தர் (2) சர்வ வல்லவர் நிழலில் என்றும் தங்குவேன் (1) சந்தோஷ கீதங்களை என்றும் பாடுவேன் (1) (என் உள்ளம்...) ஆத்ம நேசரே உம்மை அண்டிக்கொள்வேனே அன்புக் கொண்டு எந்தனை அரவணைப்பாரே (2) நித்திய கன்மலை அவர் நாமம் பாடுவேன் (1) நன்மையினால் என்னை அவர் என்றும் நடத்துவார் (1) (என் உள்ளம்...)