24
காக்கும் கரங்கள் உண்டெனக்கு
காக்கும் கரங்கள் உண்டெனக்கு
காத்திடுவார் கிருபையாலே (2)
அல்லேலூயா பாடிப் பாடி
அலைகளை நான் தாண்டிடுவேன் (2)
நம்பி வா இயேசுவை
இயேசுவை நம்பி வா
நம்பினேன் இயேசுவை
இயேசுவை நம்பினேன்
நிந்தனைகள் போராட்டம் வந்தாலும்
எந்தன் தேவன் தாங்கினாரே (2)
தேவ ஆவியில் நிறைந்தவனாய்
நேசருக்காய் ஜீவித்திடுவேன் (2)
(நம்பி வா இயேசுவை...)
கன்மலைகள் நொறுங்கும்படியாய்
கர்த்தர் என்னைக் கரம் பிடித்தார் (2)
காத்திருந்து பெலனடைந்து
கழுகு போல் நான் எழும்பிடுவேன் (2)
(நம்பி வா இயேசுவை...)