Home
240

மதுர கீதம் பாடிடுவோம்

          மதுர கீதம் பாடிடுவோம்
மன்னன் இயேசுவின் நாமத்தைப் போற்றிடுவோம்
ஆனந்தமாக கீதங்கள் பாடி
ஆண்டவர் நாமத்தை உயர்த்திடுவோம்

(மதுர கீதம்...)

வானங்கள் மேலாக உயர்ந்தவரை
வாழ்த்திப் புகழ்ந்து துதித்திடுவோம் (2)
இயேசுவே வாரும் வாஞ்சையைத் தீரும்
வார்த்தையைப் பேசும் வல்லமை தாரும் (2)

(மதுர கீதம் ...)

தூதர்கள் போற்றும் தேவன் நீரே
தீங்கொன்றும் செய்யா ராஜன் நீரே (2)
தாகம் தீர்க்கும் ஜீவ ஊற்று
தம்மிடம் வருவோரை தள்ளாத நேசர் (2)

(மதுர கீதம்...)

மாந்தர்கள் போற்றும்
ராஜன் நீரே மரணத்தை ஜெயமாக வென்றவரே (2)
மன்னிப்பை அளித்தீர் மாந்தரை மீட்டீர்
மறுரூபமாக்கி மறுமையில் சேர்த்தீர் (2)

(மதுர கீதம்...)
        

Listen to the Song

Song 240
0:00 / 0:00
Speed:

Share this Song