242
ஆண்டவர் நல்லவர்
ஆண்டவர் நல்லவர் அதிசயம் செய்பவர் அல்லேலூயா பாடுவேன் - நான் ஆனந்தமாய் பாடுவேன் (2) பெரிய பர்வதம் போன்ற தோல்விகளையும் சமபூமியாக்கியே ஜெயம் தருவார் (2) வழிகளை செவ்வைப் படுத்துவார் இயேசுவையே நோக்கி அமர்ந்திருந்தால் (2) (ஆண்டவர்...) கர்த்தரைத் தேடுங்கள் கண்டடைவீர்கள் அவரையே நோக்கிப் பார்த்து வாழ்வினிலே (2) அவர்மேல் நம்பிக்கை வைத்திடுங்கள் பாக்கியவானாய் மாற்றிடுவார் (2) (ஆண்டவர்...) கர்த்தர் நல்லவர் ருசித்துப் பாருங்கள் கணக்கில்லா நன்மைகள் செய்திடுவார் (2) கைவிடாமல் காத்திடுவார் காலமெல்லாம் உன்னை நடத்திடுவார் (2) (ஆண்டவர்...)