243
சிலுவை சுமந்த உருவம்
சிலுவை சுமந்த உருவம் சிந்தின இரத்தம் புரண்டோடியே நதி போலவே பாய்கின்றதே நம்பி இயேசுவண்டை வா (சிலுவை சுமந்த...) (1) பொல்லா உலக சிற்றின்பங்கள் எல்லாம் அழியும் மாயை (2) காணாய் நிலையான சந்தோஷம் பூமியில் கர்த்தாவின் அன்பண்டைவா (2) (சிலுவை சுமந்த...) பாவ மனித ஜாதிகளை பாசமாய் மீட்க வந்தார் (2) பாவப்பரிகாரி கர்த்தர் இயேசு நாதர் பாவமெல்லாம் சுமந்தார் (2) (சிலுவை சுமந்த...) தாகம் அடைந்தோர் எல்லோருமே தாகத்தைத் தீர்க்க வாரும் (2) ஜீவத் தண்ணீரான கர்த்தர் இயேசு நாதர் ஜீவன் உனக்களிப்பார் (2) (சிலுவை சுமந்த...)