244
அல்லேலூயா துதி மகிமை
அல்லேலூயா துதி மகிமை நம் இயேசுவுக்கு செலுத்திடுவோம் (2) ஓசன்னா ஓசன்னா ஓசன்னா ஓசன்னா ராஜாதி ராஜனுக்கே நம் தேவாதி தேவனுக்கே (1) வானமும் பூமியும் படைத்தவரே வல்லமையுள்ளவரே வானாதி வானமும் கொள்ளாத தேவன் வார்த்தையில் மாறாதவர் (4) அவர் சர்வ வல்லமையுள்ளவர் அவர் செயலில் மகத்துவமானவர் (2) (அல்லேலூயா துதி...) அலைகடல் நடுவே நடந்தவரே அற்புதம் செய்பவரே மன்னாதி மன்னன் மகிமையின் ராஜன் மகத்துவம் நிறைந்தவரே (4) அவர் உள்ளங் கைகளில் வரைந்தவர் அவர் உலகை ஆளுகை செய்பவர் (2) (அல்லேலூயா துதி...) தாழ்வினில் நம்மை நினைத்தவரே வாழ்வினைத் தந்தவரே தேவாதி தேவன் துயரங்கள் நீக்கி தினம் தினம் காப்பவரே (4) அவர் உன்னத ஆவியைத் தருபவர் அவர் உன்னத வாழ்வினில் சேர்ப்பவர் (2) (அல்லேலூயா துதி...)