245
மனித அன்பு மாறிப்
மனித அன்பு மாறிப்போகும்
மாறாத அன்பு இயேசுவின் அன்பு (2)
நிலையில்லா இந்த உலகினிலே
நிலைத்திருக்கும் இயேசுவின் அன்பு (2)
(மனித அன்பு...)
கானல் நீராய் கண்ணுக்குத் தெரியும்
கடந்துபோனால் காணாமல் மறையும் (2)
பிரிந்துபோகாமல் பரிந்து பேசும்
பரமன் இயேசுவின் அன்பைப் பார் (2)
(மனித அன்பு...)
பாசம் காட்டி வேஷம் போடும்
மனித அன்பும் மாயைதானே (2)
அடிகள் ஏற்று அழகை இழந்த
அன்பர் இயேசுவின் அன்பைப் பார் (2)
(மனித அன்பு...)
வாழத் துடிக்கும் மானிடனே
சாகத் துடித்த இயேசுவைப் பார் (2)
உதிரம் சிந்தி உயிரைக் கொடுத்த
உன்னதர் இயேசுவின் அன்பைப் பார் (2)
(மனித அன்பு...)