246
உமையன்றி யாருண்டு
உமையன்றி யாருண்டு நாதா
உம் துணையின்றி நான் எங்கு போவேன் (2)
எனை என்றும் காக்கின்ற தேவா (1)
உம் அன்பொன்றே உலகினில் போதும் (1)
(உம்மை...)
முள்ளில் சிக்கிய ஆட்டினைப்போலே
முன்னும் பின்னுமாய் நான் தவிக்கின்றேனே (2)
என்னை சுமக்க வந்த தேவனே (1)
என் துன்பம் தீர்த்த நல்ல தேவனே (1)
(உம்மை...)
கண்ணுக்குள்ளே உம் கண்ணை வைத்து
ஆலோசனைகள் சொல்லித் தந்தீரே (2)
கண்ணில் நிறைந்த அன்பு தேவனே (1)
என் கண்ணீர் துடைக்க வந்த தேவனே (1)
(உம்மை...)
தாய் பறவை தன் குஞ்சுகளை
மறந்தாலுமே நீ மறவாதவர் (2)
ஆதி முதல் என்னைத் தெரிந்துகொண்டீர் (1)
அப்பா பிதாவே என்றே அழைக்கச் செய்தீர் (1)
(உம்மை...)