Home
248

வருவாய் தருணமிதுவே

          வருவாய் தருணம் இதுவே அழைக்கிறாரே
வல்ல ஆண்டவர் இயேசுவண்டை (2)

வாழ் நாளெல்லாம் வீண் நாளாய்
வருத்தத்தோடே கழிப்பது ஏன் (2)
வல்லவர் பாதம் சரணடைந்தால்
வாழ்வித்து உன்னைச் சேர்த்துக் கொள்வார்

(வருவாய்...)

கட்டின வீடும் நிலம் பொருளும்
கண்டிடும் உற்றார் உறவினரும் (2)
கூடுவிட்டு உன் ஆவி போனால்
கூட உன்னோடு வருவதில்லை

(வருவாய்...)

அழகு மாயை நிலைத்திடாதே
அதை நம்பாதே மயக்கிடுமே (2)
மரணம் ஓர் நாள் சந்திக்குமே
மறவாதே உன் ஆண்டவரை

(வருவாய்...)

வானத்தின் கீழே பூமிமேலே
வானவர் இயேசு நாமம் அல்லால் (2)
இரட்சிப்படைய வழியில்லையே
இரட்சகர் இயேசு வழி அவரே

(வருவாய்...)

தீராத பாவம் வியாதியையும்
மாறாத உந்தன் பெலவீனமும் (2)
கோரக் குருசில் சுமந்து தீர்த்தார்
காயங்களால் குணமடைய

(வருவாய்...)
        

Listen to the Song

Song 248
0:00 / 0:00
Speed:

Share this Song