249
பாவ இருளில்
பாவ இருளில் தடுமாறி அலைந்தேன் நான் ஜீவ ஒளியைக் காட்டி என்னை மீட்டாரே (2) உம் கண்களில் கண்ணீரை கண்டேன் என் இயேசுவே (2) (பாவ இருளில்...) மரண இருளின் பாதையிலே பாவி நானும் நடந்து சென்றேன் இரக்கம் காட்டி அழைத்தவரே இரத்தம் சிந்தி மீட்டவரே உம் கரத்திலே காயங்கள் கண்டேன் என் இயேசுவே (2) (பாவ இருளில்...) ஆபத்துக் காலத்தில் தூக்கி என்னை ஆறுதல் தந்த அன்பின் தெய்வமே கலங்கிடாதே என்றவரே கரத்தை நீட்டி அணைத்தவரே உம் விலாவிலே காயங்கள் கண்டேன் என் இயேசுவே (2) (பாவ இருளில்...) ஆறுகளை நான் கடந்து சென்றேன் அவைகள் என்மேல் புரளவில்லை அக்கினி ஜீவாலை எந்தனின் மேல் அவியாமல் நீர் பாதுகாத்தீர் உம் கால்களில் காயங்கள் கண்டேன் என் இயேசுவே (பாவ இருளில்...)